கொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி! பல்கலைக்கழக மாணவன் கைது !

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பந்தய மைதானத்தில் 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 3ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Previous articleயாழில் ரணில் அரசை எதிர்த்த மக்களை கண்மூடித்தனமான தாக்கியதால் பலரும் கண்டனம்!
Next articleகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தரும் செய்தி !