குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தரும் செய்தி !

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்.

சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி நிதிச் சலுகைகளை 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீடிக்கத் தேவையான நிதியை வழங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Previous articleகொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி! பல்கலைக்கழக மாணவன் கைது !
Next articleயாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் !