யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் !

யாழ். வடமாகாணசபை விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.

2013ஆம் ஆண்டு முதல் வடமாகாண சபையில் பேரவைச் செயலாளராகவும், பிரதியமைச்சராகவும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இறுதியாக மாகாண சபையின் விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தரும் செய்தி !
Next articleமூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! எரிபொருளை QRக்கு கொடுப்பதில் புதிய சிக்கல் !