14 நாட்களுக்கு தடையின்றி மின் விநியோகம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் 14 நாட்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.அவரை தொடர்ந்து அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தனவும் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் (17.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை இவர் கூறியுள்ளார்.

பரீட்சை எழுதும் ஆசிரியர்களின் நலன்கருதியும் மாணவர்களின் நலன் கருதியும் இத் தீர்மானம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது!

அதே வேளை மின் வெட்டு இன்றி தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 357 மில்லியன் ரூபா வீதம்  5 பில்லியன் ரூபா செலவாகும் என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Previous article2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next articleமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக உண்டியல் குலுக்கி பணம் சேகரித்த நபர்!