தேர்தலை ஒற்றி வைக்க நினைத்தால் இலட்சக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்!

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைத்தால் இலட்சக்கணக்கான மக்களை வீதிக்கு இறக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசு எந்த தீர்வினையும் வழங்கவில்லை மாறாக நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்

அதைவிட மின் கட்டணத்தை அதிகரிப்பதில் அரசு திடமாக இருக்கிறது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுலுள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு செல்லும் அதே சமயம் தேர்தலில் இவ் அரசு தோல்வியை மட்டுமே பெற்றுக் கொள்ளும் நிலையான அரசால் மட்டுமே இதற்க்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க இயலும் நிலையான அரசையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன எனவும்

தேர்தலை நடத்தாமல் ஒற்றி வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது எனவும் அவ்வாறு தேர்தலை நடத்தாமல் ஒற்றி வைக்க நினைத்தால் இலட்சக் கணக்கான மக்களை வீதிக்கிறக்கி போராடுவோம் என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளனர்

Previous articleகனடாவில் இடம்பெற்ற விபத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!
Next articleகொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!