யாழில் தேங்காய் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ் அராலி மத்தி பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்ததில் 39 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தி பகுதியில் வசிக்கும் சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபர் சாரதியாக பணி புரிந்து வருகின்றார்.

இவர் தென்னை மரத்தின் கீழே வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த வேளை உறங்கி விட்டார் அதே நேரம் பார்த்து தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று அவரது நெஞ்சுப் பகுதியில் விழுந்தது உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இடையிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்ட பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!

Previous article15 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 21 வயது இளைஞன் கைது!
Next article17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இரு பிள்ளைகளின் தாயார் ! தவித்த குழந்தைகள்!