தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது நிறுத்தம்! வெளியான முக்கிய அறிவிப்பு !

2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக அட்டைகள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக பதிவுத் திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை மாத்திரமே பதிவுத் திணைக்களம் வழங்கும் என அதன் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் அட்டை தட்டுப்பாடு நீங்கும் வரை தேசிய அடையாள அட்டை விநியோகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!
Next article14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான மகிழ்ச்சித் தகவல் !