14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான மகிழ்ச்சித் தகவல் !

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை அறிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17.01.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நிலைத் தேர்வு நடைபெறுவதால் 14 நாட்களுக்கு நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக பந்துல குறிப்பிட்டார்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 357 மில்லியன் ரூபா வீதம் தொடர்ந்து 14 நாட்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா செலவாகும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.