யாழில் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பிலான விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை அவரது இருப்பிடத்துக்கு சென்ற பொலிஸார் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

3 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு நீதவான் முன்னிலையில் வேலன் சுவாமிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

.

Previous articleஇலங்கையில் இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பு விபரம் வெளியீடு!
Next articleமாதாந்த செலவுகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிடும் கோட்டாபய ராஜபக்ச