ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பெற்றுக்கொள்ள முனையும் இலங்கை போக்குவரத்து சபை!

தற்போது இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையினால் நாளொன்றுக்கு 800 பஸ்களை கூட இயக்க முடியாத நிலை உள்ளதாக இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) கூறியுள்ளார்.

ஆகையால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபையில் இணைக்க இருப்பதாக நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Previous articleபுனர்வாழ்வு பணியக சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு!
Next articleபோரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு