செலவின சட்டமூலம் இன்று நிறைவேறுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்!

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டு இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.