யாழில் விடுதியில் தங்கியிருக்கும் ஜோடியினை இரகசிய கமரா மூலம் படம் பிடித்த நபர் கைது!

யாழில் நகரப் பகுதில் உள்ள விடுதி ஒன்றினுள் தங்குமிட விடுதியில் ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை அவர்களுக்கு தெரியாமல் யன்னல் வழியாக இரகசியமாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை யின் போது குறித்த விடுதியின் அனைத்து அறைகளிலும் இவ்வாறு சுவர் வழியாக திருட்டு தனமாக கமெராக்கள் வைத்து தொடர்ச்சியாக வீடியோ எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது!

தென்னிலங்கை ஜோடி ஒன்று விடுதியினுள் தங்கி உறங்கி கொண்டிருந்த வேளை ஒருவர் ஜன்னல் வழியாக படம் பிடித்ததை அவதானித்துள்ளனர்.உடனடியாக யாழ் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஜோடி முறைப்பாடு செய்தற்கு அமைய படம் பிடித்த செய்தி உண்மை என பொலிசார் உறுதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனினும் குறித்த விடுதியில் பணியாற்றிய சிலர் தலைமறைவாகிவிட்டனர்.

Previous articleவடிவேலுவின் தயார் உடல் நலக் குறைவால் காலமானார்!
Next articleபாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் இளைஞன்ஆகிய இருவரின் சடலங்கள் மீட்பு!