உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!20222 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரும் (23.01.2023) அன்று ஆரம்பமாகவுள்ளது 23இல் இருந்து 17ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளது!

பரீட்சை சட்ட விதிகளுக்கு அமைய ,மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புளூடூத் போன்ற இலத்திரனியல் சாதனங்களை பரீட்சை நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை அத்துடன் பரீட்சை எழுதுபவர்கள் செல்லக்கூடிய இடங்களில் வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது

ஆகவே கூறப்பட்ட விதிமுறைகளை மீறும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்  ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடையும் விதிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர அறிவிப்பு விடுத்துள்ளார்

Previous articleயாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் ! தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் !
Next articleவேலன் சுவாமி கைது செய்யப்படதை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவர்கள்!