உலக வங்கிச் சுட்டெண்ணில் முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை!

உலகில் அதிகம் உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உலக வங்கியின் சமீபத்திய சுட்டெண்ணின் படி இலங்கை தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது!

அதற்க்கமைய , இலங்கையின் உணவுப் பணவீக்கம் தற்போது 64 சதவீதமாக உள்ளது உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த உணவுச் சுட்டெண்ணில் இலங்கை 74 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் ஏழாவது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை  உலக வங்கிக் குறியீட்டின்படி இந்த ஆண்டு  ஜிம்பாப்வே நாடே உலகில் அதிக உணவுப் பணவீக்கத்துடன் 376 சதவீதமாக உயர்வடைந்து உள்ளது

மேலும் இரண்டாம் மூன்றாம் இடங்களில்  லெபனான் மற்றும் வெனிசுலா மாநிலங்கள் 171 மற்றும் 158 சதவீதமாக உள்ளன