யாழில் கசிப்பு காய்ச்சிய 65 வயதான நபர் கைது !

யாழில் கசிப்பு காய்ச்சிய 65 வயதான நபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவானது ஆனைக்கோட்டை, ஆறுகால்மடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவழைப்பில் சந்தேக நபர் கை்து செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தவென மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous articleபாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் இளைஞன்ஆகிய இருவரின் சடலங்கள் மீட்பு!
Next articleஉடலுறவில் 50 வயது கணவரின் விபரீத ஆசை: 28 வயது மனைவி பலி!