விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வலம்புரியுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டைச்சோனமடு பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் கடந்த 14 ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விலையுயர்ந்த வலம்புரியை வைத்திருந்த கன்னங்குடாவைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.