வவுனியாவில் போதைப்பொருள் பாவித்து உயிரிழந்த நபரின் புகைப்படத்தை பாரத்து அதிர்ந்து போன இளைஞர்கள் !

வவுனியாவில் நபர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானதைதொடர்ந்து உயிரிழந்ததையடுத்து அவரின் புகைப்படம் பகிரப்பட்டதை இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.

இந்நபர் போதைப்பொருளுக்கு அடிமையாதையடுத்து அவருக்கு தொடரப்பட்ட வழக்கினால் கடந்த செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி புனர்வாழ்வுக்காக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் போதைப்பொாருள் பாவித்ததால் அவரின் உடல் மோசமானதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அந்நபரின் புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டதையடுத்து போதைப்பொருள் பாவிக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையையும் பயத்தினையும் உண்டாக்கியுள்ளது.

இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானால் இதுதான் கடைசி நிலமை என்பதை மறவாதீர் ! போதைப்பொருட்களை தவிர்த்திடுங்கள் !

Previous articleவலம்புரி சங்குடன் ஒருவர் கைது!
Next articleபிக்பாஸ் ஜனனி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: நூறு பேருக்கு அதிஷ்டம்!