யாழில் போதைப் பொருள் பாவனையால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை!

யாழில் தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ் கொடிகாமம் வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப் பொருள் குற்றச் சாட்டின் பேரில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அன்று வயிற்றுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இவரது திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்ட விசாரணையில் தொப்டர்ச்சியான போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருந்தமையாலேயே இவ் இறப்பு நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்!

Previous articleஉயர்தர பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !
Next articleயாழில் சுற்றுலாத் துறைசார் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் கனடா வாழ் இலங்கையர்கள்!