யாழில் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் கைது !

யாழில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது யாழ்.வடமராட்சி – கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மீசல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனமும் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleகொழும்பு மாணவி கொலை தொடர்பில் கண்ணீரை வரவழைக்கும் பதிவு!
Next articleயாழில் எலி கடித்த உணவுப் பொருள் விற்பனை!