உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் மேற்கத்திய நாடுகள் தொடர்பில் அதிருப்தி அடையும் ரஷ்யா

இந்த நிலையில், ரஷ்யாவுடனான தாக்குதலை எதிர் கொண்டு சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு மிக நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பில் மேற்கத்திய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப இருப்பதாக உள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு வெளியிட்டது இது தொடர்பில் ரஷ்யா மேலும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவை எதிர் கொண்டு தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கினால், போர் மேலும் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரிகை விடுத்துள்ளது!

அத்தோடு அமெரிக்கா உக்ரைனை இராணுவ ரீதியாக அங்கீகரிப்பதற்க்கான புதிய பேச்சு வார்த்தைக்கு தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது!

ராம்ஸ்டீனில் உள்ள விமானத்தளம் ஒன்றில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது! அத்துடன் ரஷ்யாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்

இருப்பினும் ரஷ்யா உக்ரைன் மீது தமது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஓர் ஆண்டை நெருங்குகின்றது! ரஷ்யாவிற்கு இணையாக உக்ரைனும் பதிலடி கொடுத்தே வருகின்றது.

Previous articleயாழில் சுற்றுலாத் துறைசார் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் கனடா வாழ் இலங்கையர்கள்!
Next articleமுட்டைக்கு விலை சூத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு