முட்டைக்கு விலை சூத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் தலைவர், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தினார்.

அந்த அதிகார சபையின் அதிகாரிகள், நேற்றைய தினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முட்டை இறக்குமதிக்கு முன்னிலையான நிறுவனம், 32 ரூபா 5 சதத்திற்கு, அதனை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.

எனினும், பறவைக் காய்ச்சல் காரணமாக, முட்டை இறக்குமதிக்கு இடமளிக்க முடியாதென கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோப் குழுவின் கூட்டத்தில் தெரிவித்தார்.

Previous articleஉக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!
Next articleகட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு