வடக்கு வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காலநிலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் எதிர்வு கூறியுள்ள சில விடயங்கள் வருமாறு

அதாவது எதிர்வரும் 23.01.2023 முதல் 27.01.2023 வரையான காலப்பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்படவுள்ள காரணத்தினால் வட மாகாணத்தின் பல பகுதிகளில் இடையிடையே கன மழையாகவோ அல்லது சாதாரண தூறல் ,மழையாகவோ மாலை அல்லது காலை நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நெல் அறுவடையை மேற்க்கொள்ள இருக்கும் விவசாயிகள் 23.01.2023 தொடக்கம் 27.01.2023 வரையிலான காலப்பகுதியினுள் நெல் அறுவடையை மேற்கொள்வது மிகவும் நல்லது என குறிப்பிடுள்ளார்.