யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரிக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை முழுவதும் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் ஆரம்பமாகியுள்ளது.

மேற்படி நேர்முகத்தேர்வு எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரிக்கான நேர்முகப்பரீட்சை மேற்படி திகதியில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்

.

Previous articleஇலங்கையில் அறிமுகமாகும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்
Next articleவடக்கு வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!