பிரான்சில் ஆரம்பப் படசாலை ஒன்றிலிருந்து மாயமான மாணவர்கள்!

பிரான்ஸின் தலைநகரனா பாரிஸில் இருக்கும் ஆரம்ப பாடசாலை ஒன்றில் இருந்து மூன்று மாணவர்கள் வெளியேறியுள்ள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது!

பாரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் Balard பகுதியில் ஆரம்பப் பாடசாலை ஒன்றிலிருந்தே யாரும் அறியாத நேரத்தில் நேற்றைய தினம் நான்கு வயதுடைய மூன்று மாணவர்கள் வெளியேறியுள்ளர் என்று ஆசிரியர்கள் யாருமே மாணவர்கள் வெளியேறியதனை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது!

ஒரு மணி நேரத்திற்கு பின்னர் பாதசாரி ஒருவரால் காணமல் போன மாணவர்கள் படசாலையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்படனர்.

பாடசாலை நிர்வாகத்தின் அவதானமின்மை குறித்து அதிருப்பதி அடைந்த பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleயாழ் மூக்குக் கண்ணாடி கடையில் போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது!
Next articleதிருமணத்திற்காக போலியான விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற யுவதி கைது!