மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு பலி !

பேராதனையில் மேடு சரிந்து விழுந்ததில் 18 வயதுடைய பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை புராதன ஆலய வளாகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை குறித்த பிக்கு விகாரையின் மேல் முற்றத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

மண்ணில் புதையுண்டு படுகாயமடைந்த பிக்கு பெரத்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (20.01.2023) அதிகாலை உயிரிழந்தார்.

Previous articleயாழில் வெளிநாட்டிலிருந்து கூலிப்படைக்கு பணம் அனுப்பபட்டு வர்தக நிலையம் மீது தாக்குதல் !
Next articleகுரங்குகள் கிளையை உலுப்பியதால் உயிரிழந்த பெண் !