நுவரெலியா விபத்து: செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கை!

நானுஓயாவில் நேற்று (20-01-2023) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த 7 பேரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு அவரது அனுதாபங்கள்.

மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கியதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான வீதி விபத்துக்கள் இடம்பெறாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleபாடசாலைகள் முன்பாக அநாவசியமாக காத்திருக்கும் இளைஞர்கள்! பெற்றோர்கள் கோரிக்கை !
Next articleயாழில் ஆட்களற்ற வீட்டில் தங்கியிருந்த நிலையில் சிக்கிய ஜோடிகள்!