இன்று மௌனி அமாவாசை நாளாகும்!

இந்த அமாவாசை சனிக்கிழமைகளில் வந்தால் அதனை சனி அமாவசை என்றும் அழைக்கின்றனர்.நீண்ட ஆண்டுகளுக்கு பின்னனர் சனி அமாவாசையும் மௌனி அமாவாசையும் ஒன்றாக வந்துள்ளது!

மௌனி அமாவாசை மிகவும் புனிதமான நாளாகும்.இந் நாளில் புனித நதிகளில் நீராடி வழிபாடு செய்வர் அத்துடன் தபங்கள், ஸ்நானம்-தானம் வழங்குவதற்கு மௌனி அமாவாசைமிகவும் உகந்ததாக கருதப்படும்.

இன்று (21.01.2023) காலை 06:17 மணிக்கு ஆரம்பிக்கும் மௌனி அமாவாசை தொடர்ந்து . இரண்டு நாட்கள் நீடிக்கின்றது! அத்துடன் இந்த மகமாசம் அமாவாசை வரும் ஞாயிறு (22.1.2023) மதியம் 02:22 மணிக்கு நிறைவடைகின்றது!

இன்றைய நாள் நமது முன்னோர்களை வணங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது  அத்துடன் தர்ப்பணம் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாகும்.

இந்த அமாவாசை நாளில் முன்னோர்களை சபிக்கவோ புறக்கணிக்கவோ கூடாது அப்படி செய்தால் வாழ்வில் பலவிதமான கஷ்டங்கள் ஏற்ப்படும்.

இந்த சனி அமாவாசை நாளில் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் நல்ல செயல்களை செய்தால் அவர்கள் ஜாதகத்திலிருந்து தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது!

இந் நாளில் யாரையும் துன்புறுத்தாதீர்கள் குறிப்பாக  தொழிலாளி வர்க்கம், மாற்றுத்திறனாளிகள், நாய்கள் போன்றவறிற்கு எந்த தீங்கினையும் ஏற்ப்படுத்த்தீர்கள்! அத்துடன் அமைதியாக இருந்து கொள்ளுங்கள் யாருடனும் வாக்குவாதத்திற்கு செல்லாதீர்கள் அப்படி வாக்குவாதம் செய்தால் அது காலத்திற்கும் நீடிக்கும்

அத்துடன் வீட்டினை நன்றாக சுத்தம் செய்து அழகாக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வாறு செய்வதால்  லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும்

Previous articleபாடசாலையொன்றில் சகமாணவர்களின் தாக்குதலினால் சுயநினைவை இழந்த மாணவன் !
Next articleவார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!