வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் (21,22) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Previous articleஇன்று மௌனி அமாவாசை நாளாகும்!
Next articleதிடீரென பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்யார் தெரியுமா?