கிளிநொச்சி, யாழ்ப்பாணம், இராஜகிரிய பகுதி இளைஞர்கள் விமான நிலையத்தில் அதிரடி கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி போலந்து வீசாவுடன் நான்கு பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தோஹா மற்றும் கட்டார் ஊடாக போலந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் ராஜகிரிய பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டரீதியாக போலந்துக்கு தொழில்வாய்ப்புக்காக அனுப்புவதாக உறுதியளித்து அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட மனித கடத்தல்காரர்களே இந்த குழுவை அனுப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி நபர்களை பிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Previous articleதிடீரென பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்யார் தெரியுமா?
Next articleமுட்டைக்கு புதிய விலை அறிவிப்பு