ப்ரோமோ மூலம் சீக்ரெட்டை கசிய விட்ட பிக்பாஸ்! டைட்டில் வின்னரில் மக்கள் ஏற்படுத்திய அதிரடியான மாற்றம்

பிக் பாஸ் சீசன் 6 ல் நிகழ்ச்சியில் வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுத்த க்ளுவை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பிக் பாஸ் சீசன் 6 நிறைவுக்காலத்தை எட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர்கள் வீதம் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஜிபி முத்து வெளியேறினார்.

இவரை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் முதல் பணமூட்டையை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் அமுதவாணன் ரூபாய் 13 இலட்சத்தை எடுத்துக் கொண்டு அமுதவாணன் அதிரடியாக வெளியேறியுள்ளார்.

இந்த டுவிஸ்ட்டை பிக் பாஸ் வீட்டிலுள்ள எந்த போட்டியாளரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இருந்தால் கண்டிப்பாக மூன்றாவது இடத்தை சரி பிடித்திருப்பார் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 ல் முதல் முறையாக இவர் தான் அதிக பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் என்ற பட்டமும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களின் நினைவுகள் என்ற பெயரில் பிக் பாஸ் புகழ்ந்துக் கொட்டியுள்ளார்.

இவரின் புகழ்ச்சியால் போட்டியாளர்கள் அணைவரும் கண்கலங்கியப்படி பிக் பாஸிற்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.

இதில் விக்ரமணை “வெளியில் உங்கள் புரட்சி தொடரட்டும்” என்றும், “அசீமை உங்களின் கோபத்தை குறைத்து வாழ்க்கை தொடங்க வாழ்த்துக்கள்” என்றும் கூறியிருக்கிறார்.

இதனை கவனித்த ரசிகர்கள் “பிக் பாஸ் யாரை புகழ்கிறாரோ” அவர் தான் “டைட்டில் வின்னர்”என உறுதியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

அந்தவகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமன், இரண்டாம் இடம் அசீம், மூன்றாம் இடம் சிவின், நான்காம் இடம் மைனா இது தான் ஃப்னலில் நடக்கும் எனக்கூறியுள்ளார்கள்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

Previous articleமுட்டைக்கு புதிய விலை அறிவிப்பு
Next articleஅரச வாகன பாவனை குறித்து சர்ச்சையில் சிக்கிய கோட்டாபய! வெளியான அறிக்கை