Home சர்வதேச செய்தி சீஸ் பிரியர்…வசீகரமான மனிதர்! வட கொரிய ஜனாதிபதியின் சாகசங்கள்

சீஸ் பிரியர்…வசீகரமான மனிதர்! வட கொரிய ஜனாதிபதியின் சாகசங்கள்

kimjong_facts_002வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் சிறு வயது முதற்கொண்டு செய்துள்ள சாகசங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
* வடகொரியா ஜனாதிபதியான கிம், தனது 3 வயதில் இருந்தே வாகனங்களை செலுத்துவதில் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக அங்குள்ள பாடசாலை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு 9 வயதான போது பல படகுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளதாக கூறி அங்குள்ள மக்கள் பெருமை பாராட்டுகின்றனர்.

* ஜனாதிபதி கிம் மறைந்த தமது தாத்தா போன்று தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அறுவைச்சிகிச்சையும் செய்யப்பட்டதாம்,

அதற்காகவே அவருக்கு பிரத்யேக பயிற்சிகள் பல தரப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

* கடந்த 2012 ஆம் ஆண்டு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையதளம் ஒன்று கருத்துக்கணிப்பை வெளியிட்டது,

அதில் உலகின் மிகவும் வசீகரம் மிக்க மனிதராக கிம் தெரிவு செய்யப்பட்டார்.

* 2014ஆம் ஆண்டு கிம் நோய்வாய்ப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பின்னணியில், சுவிஸ் நாட்டின் Emmental மீது அவருக்கு இருந்த தீராத ஆசைதான் காரணம் என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்று வந்த காலகட்டத்தில் இருந்தே அவருக்கு சீஸ் மீது தீராத பிணைப்பு ஏற்பட்டு விட்டதாம், அதன் காரணமாகவே அவரது உடல் வீர்த்திருப்பதாகவும் அங்குள்ள தினசரிகள் கூறுகின்றன.

* இவரது முக்கிய சாதனையாக கருதப்படுவது வடகொரியாவின் மிகவும் உயரம் கொண்ட சிகரமான Paektu மீது ஏறியதுதான் என அங்குள்ள தேசிய ஊடகம் தெரிவிக்கின்றது.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் கிம் இந்த சாகசத்தை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

9000 அடி உயரம் கொண்ட Paektu சிகரமானது கிஸாவில் இருக்கும் பிரமிடை விடவும் 20 மடங்கு உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.