கிழக்கு மாகாணத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான பெண் கைது! கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தலைமறைவு!!!

கிழக்கு மாகாணத்தில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான யுவதி ஒருவர் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்ளிலும் கிழக்கு மாகாணத்திலும் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான இளம் யுவதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த யுவதியுடன் இணைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஜவரை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சந்தேக நபர்  16 ஆம் திகதி மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கிடைத்த தகவலிற்கு அமைய மேலும் 2 ஆண்களையும் , யுவதி ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

கைதான பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தற்போது கொச்சிக்கடையில் வசிப்பவர் எனவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் நான்காவது சந்தேக நபர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் மகள் எனவும் ஜந்தாவது சந்தேக நபர் கொழும்பில் தங்க நகை வியாபாரம் மேற்கொள்பவர் எனவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது!

கைதான யுவதி ஓர் அழகுக்கலை நிபுணர் எனவும் மணப்பெண் அலங்காரத்திற்காக செல்லும் யுவதி அதே நேரம் திருடுவதற்காக அலங்காரத்திற்கு செல்லும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளைக் கும்பலிற்கு வழங்குபவர் எனவும் அதன்படி கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்

மேலும் யாழை சேர்ந்த யுவதின் நெருக்கமான ஒரு நபரே இந்த கொள்ளைக் கும்பலை வழி நடாத்தி வந்தவர் எனவும் பொலிசாரின் விசராணைகளில் தெரிய வந்துள்ளது எனினும் தற்போது யாழைச் சேர்ந்த குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தலைமறைவாகிய நபர் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை அனுப்புபவர் எனவும் தெரிய வந்துள்ளது!

கைதானவர்களிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 3 அமெரிக்கத் தயாரிப்பான 7.65 மிமீ தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, இரவுக் கொள்ளைகளுக்கான இருப்புத் தடி, போலி நம்பர் பிளேட் கொண்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள், மொபைல் போன்கள், 120 கிராம் தங்கக் கட்டிகள், தங்கச் சங்கிலி உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.

கைதான நபர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கபட்டவுள்ளனர்.

குறித்த யுவதி கிழக்கு மாகணத்தில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் அதோடு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கொள்ளையிட்டுள்ளார்!அத்துடன் இந்த கொள்ளை சம்பவ்க்கள் தொடர்பில் யுவதி உட்பட ஐந்து பேரை களுவாஞ்சிகுடி பொலிஸார் நேற்று (20) கைது செய்துள்ளனர்.

Previous article12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யும் கூகுள்
Next articleவீடினுள் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த நபர்!