யாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறைக் கும்பல் தாக்குதல்!

நேற்று இரவு   யாழ்.கோண்டாவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருவர் வசித்து வந்த நிலையில் 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வீட்டினுள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட குழு வீட்டினையும் வீட்டினில் நின்ற மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

யாழில் இவ்வாறன சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இரு நாட்களுக்கு முன்னரும் யாழ் கல்வியங்காட்டில் வர்த்தநிலைய உரிமையாளர் மீதும் வர்த்தக நிலையம் மீதும் இனம் தெரியாத சில நபர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்!

Previous articleநாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!
Next articleஇலங்கையில் அறிமுகமாக இருக்கும் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள்