இலங்கையில் அறிமுகமாக இருக்கும் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள்

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்ததாக இலங்கை குடிவரவு,மற்றும் குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரான ஹர்ச இலுக்பிட்டிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதே போன்று இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் விசா அனுமதிகளுக்காக அறவிடப்பட்ட கட்டணங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு சென்ற ஆண்டில் மாத்திரம் சுமார்  20.1 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது!

ஆகையால் இவ் ஆண்டு தற்போது வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை நவீனமயப்படுத்தப்பட்டு, இலத்திரனியல் கடவுச்சீட்டாக அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டு வருகின்றது! அதற்கமைய தொழில் நுட்பக் குழுவொன்றும் அமைக்கப்பட்டு அது தொடர்பான வேலைகள் மேற்க்கொள்ளப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக  குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரான   ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறைக் கும்பல் தாக்குதல்!
Next articleயாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த சண்டியர்கள் !