யாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த சண்டியர்கள் !

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்குப் பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த இருவர் மீது 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த குழுவினர் வீடு மற்றும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுபுறம் யாழ்.கல்வி நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அதன் உரிமையாளர் மீது இரு தினங்களுக்கு முன்னர் சிலர் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் அறிமுகமாக இருக்கும் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள்
Next articleநேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 03 சிறார்கள் உட்பட பலர் பலி ! வெளியான விபரம் !