நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 03 சிறார்கள் உட்பட பலர் பலி ! வெளியான விபரம் !

நுவரெலியா – நானுஓயா – ரடெல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு டேஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட 46 பேருடன் சென்ற பஸ், ஹட்டன் டிக்கோயாவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த வேன் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள சோமர்செட் தேநீர் நிலையத்திற்கு அருகில் நேற்று (20) இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக நானுயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேரில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

01:- அப்துல் ரஹீம் (55)

02:- ஆயிஷா பாத்திமா (45)

03:- மரியம் (13)

04:- நபீஹா (08)

05:- ரஹீம் (14)

06:- நேசராஜ்பிள்ளை (வேன் டிரைவர்) (25)

07:- சண்முகராஜ் (25) (நானுஓயா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி) என்பவரும் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த சண்டியர்கள் !
Next articleகிழக்கு மாகாணத்தை அதிர வைத்த யுவதி! தலைமறைவான யாழ் நபர்!