தென்னிலங்கையில் மற்றுமொரு பேருந்து விபத்து ! 20 பேருக்கு நேர்ந்த சோகம் !

தென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்வில பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் மடுல்கல ஊடாக பன்வில நோக்கி சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளனர், அவர்களில் 16 பெண்களும் நான்கு ஆண்களும் காயமடைந்து மடுகல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleயாழ். மாவட்டத்தில் பாணின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் !
Next articleமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ! வெளியான காரணம் !