நஷ்ட ஈட்டுடன் அரச பணியாளர்களை பணிநீக்க திட்டமிடும் அரசு!

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக பல நிறுவனங்களை ஒன்றாக்கவும் , சில நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவும் நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

அதற்கமைய அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இயந்திரங்கள் நிறுவனத்தை ஒன்றிணைக்க அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது!

ஆகவே அவ் நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையோரை பணியி இருந்து நீக்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய அரச சொத்துக்களை விற்று பணியில் இருந்து நீக்கப்படும் அரச ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது!!

Previous articleயாழில் இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை ! நேற்றிரவு இடம்பெற்ற கோர சம்பவம் !
Next articleஇன்றைய ராசிபலன்22.01.2023