யாழில் வேட்பு மனுத்தாக்கலால் பலத்த பாதுகாப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அதிகளவில் வருவதை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் போடப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்நிலையில், மேலும் சில கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. இதன்படி யாழ் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

அதேபோன்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

Previous articleஅரச பணியாளர்கள் பலரை பணி நீக்க திட்டம்!
Next articleயாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய களமிறங்கும் கனடா தமிழர்கள் !