யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்த இளைஞர்கள் ! நெகிழ்ச்சியான செயலால் குவியும் பாராட்டுக்கள் !

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்து ஒப்படைத்த இளைஞர்களுக்கு அப்பகுதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் 8 போதை மாத்திரைகளை வைத்திருந்த போதே இவ்வாறு பிடிபட்டுள்ளார்.

மணப்புலம் – முளவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த செயலை செய்த இளைஞர்களின் முன்னுதாரண செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் 8,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!
Next articleயாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்து ! ஒருவர் வைத்தியசாலையில் !