கவனக்குறைவால் மற்றொரு உயிர் பலி! : மாத்தறையில் சம்பவம்!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (22.01.2023) இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த களுகுமாரி புகையிரதம் இன்று காலை 6.45 மணியளவில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி தம்மிக்க தேசப்பிரிய என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 22 வயதான கிரிஷான் மதுசங்க காயமடைந்துள்ளார்.

புகையிரத சமிக்ஞை ஒளிரும் போது முச்சக்கரவண்டி கவனக்குறைவாக புகையிரத பாதையை கடந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleநாளை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleபேருந்துக்காக காத்திருந்த பெண்ணை மோதி தள்ளிய தனியார் பேருந்து !