பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை மோதி தள்ளிய தனியார் பேருந்து !

புத்தளம் ரத்மலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பி பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) என்ற வயோதிப பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலை பிரதேசத்தில் இருந்து புத்தளம் செல்லும் வீதியில் நின்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் மீது தனியார் பயணிகள் பேருந்து மோதியுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வயோதிப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி புத்தளம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த பேருந்து பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகவனக்குறைவால் மற்றொரு உயிர் பலி! : மாத்தறையில் சம்பவம்!
Next articleநிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துக்குள் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!