பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்ற அஸிம் !

பிக்பாஸ் சீசன் 6ல் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் வின்னர் ஆசிம் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றார்.

பின்னர் ஒவ்வொரு வாரமும் பொது வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், போட்டியாளர் கதிரவன் பணப் பையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதேபோல் அமுதவாணனும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். இறுதியாக அசிம், விக்ரமன், ஷிவின் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து அசிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டுமே வீட்டில் போட்டியிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 6-ன் வெற்றியாளர் யார் என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன், அசிம் ஆகியோரின் கைகளை கமல்ஹாசன் பிடிக்க, மூன்றாவது இடத்தை ஷிவின் பெற, அசிம் கையை உயர்த்தி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இதன் மூலம் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அசிம் பெற்றார். இதையடுத்து அவருக்கு பிக்பாஸ் கோப்பை வழங்கப்பட்டது. 50 லட்சம் ரூபாயும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கூடுதல் பரிசாக கார் ஒன்றும் வழங்கப்பட்டது. விக்ரமன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் 23/01/2023
Next articleநாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!