பணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

வீட்டிலும் தொழில் நிறுவனங்களிலும் பணப் பெட்டி வைக்கும் இடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏனெனில் பணம் தான் தற்காலத்தில் வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

வடக்கு திசை குபேரனுக்கு உகந்த திசை செல்வத்திற்கு அதிபதியானவர் குபேரன் ஆகையால் வடக்கு திசையில் பணப்பெட்டியை வைக்கலாம்.அதே போன்று தென்மேற்கு மூலையில் வடக்கு திசையினை பார்த்தவாறும் வைக்கலாம்.

பணபெட்டியின் கதவு ஒற்றையாக இருக்க வேண்டும் அத்துடன் பணப்பெட்டி வைக்கும் அறையின் நுழைவாயில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும் இப்படி வைப்பதால் செல்வ செழிப்பு கூடும் தென்கிழக்கு திசையிலே அல்லது தென்மேற்கு திசையிலோ இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்ப்படும்

அத்துடன் பணப்பெட்டி மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் பெட்டியினுள் இருக்கும் பணத்தினை முழுமையாக எடுத்து விடக் கூடாது ஒரு ரூபாயானாலும் பெட்டியினுள் இருக்க வேண்டும்

அலுமாரியினுள் பணத்தினை வைப்பதாயின் நடுத்தட்டினுள் வைக்க வேண்டும் பணம் வைக்கும் இடத்தினுள் துணிகள் வைக்க கூடாது பணப் பெட்டியினுள் வாசனைத்திரவியங்கள் இட்டு வைக்க கூடாது!

Previous articleஇன்றைய நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!
Next articleஇன்று காலை சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம்புரண்டது!