இலங்கை கால்பந்து சபைக்கு தடை விதித்துள்ள  சர்வதேச கால்பந்து சம்மேளனம்!

இலங்கைக்கு காற்பந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது!

14ஆம் திகதி அன்று புதிய நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சினால் தேர்வு செய்யப்பட்டது. இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் இலங்கை கால்பந்து அணிக்கு தடை உத்தரவு ஒன்றினையும் பிறப்பித்துள்ளது.

அதாவது இலங்கையின் தேசிய அணியை சேர்ந்த எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ சர்வதேச போட்டிகளிலும் சரி வேற எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாது எனவும் தடை உத்தரவை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரான உபாலி ஹெவகேவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கியுள்ளது!