யாழில் போதை தலைக்கேறிய நிலையில் பிரசவத்திற்கு சென்ற ஆசிரியர்!

யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் தனியார் வைத்தியசாலைக்கு பிரசவம் பார்க்க சென்ற சம்பவம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது!

குறித்த ஆசிரியரின் கணவர் பிரபலமான நகை வியாபாரியாவர் அவரும் கஞ்சாவிற்கு அடிமையாகியதுடன் மனைவிக்கும் அதனை கொடுத்து பழக்கத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட வைத்தியசாலையில் ஆசிரியரான யுவதி கஞ்சாவிற்கு அடிமையான நிலையில் இருத்ததை தாதியர்கள் அவதானித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மகப்பேற்று நிபுணரிடம் கூறிய வேளை அவர் குறித்த பெண்ணை பரிசோதனை செய்து பாதுகாப்பான முறையில் மகப்பேற்றினை மேற்கொண்டார்.

பின்னர் ஆசிரியரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் கணவர் போதைக்கு அடிமையானதால் என்னையும் அதில் பழக்கத்திற்கு உட்படுத்தினார் என கூறியுள்ளார் உடனடியாக ஆசிரியரின் கணவரை அழைத்து போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்த நிலையில் இது குறித்து நாமும் பாதுகாப்பாக இருந்து பிறர் மீதும் கருணை கொண்டு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்

Previous articleதேர்தல் காலங்களில் அரச சேவை இடமாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next articleஏலத்திற்கு விடப்பட்டிருக்கும் இலங்கையின் பழமையான நாணயத்தாள்