வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (23) பிற்பகல் கொழும்பு துறைமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துறைமுக தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக முதலாம் குறுக்குத் தெரு மற்றும் அப்துல் காதர் மாவத்தை முற்றாக தடைப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துறைமுக வளாகத்தில் போராட்டம் நடைபெற்ற பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Previous articleநாளை மின்வெட்டு அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு!
Next articleசிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!