யாழில் 450 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

நெல்லியடி அரச புரனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட புலனாய்வுக் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரியும், உதவி பரிசோகருமான ரத்நாயக்கா தலைமையில் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் இரவு (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleஅரச சேவையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!
Next articleவாட்ஸ் அப்பில் வரப்போகுது அப்டேட்: புகைப்படங்களை அனுப்புவதில் புதிய வசதி!