வாட்ஸ் அப்பில் வரப்போகுது அப்டேட்: புகைப்படங்களை அனுப்புவதில் புதிய வசதி!

ஸ்மார்ட் போன் பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களை கவர அவ்வப்போது புதுப் புது அப்டேட்களை கொடுத்து அசத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் இமேஜ்களை அதன் ஒரிஜினல் குவாலிட்டியில் அனுப்பும் வசதி அறிமுகம் ஆகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் காரணமாக சமூக வலைத்தள பயன்பாடும் மக்கள் மத்தியில் பெருமளவு அதிகரித்து விட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பொழுது போக்கிற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள் என்றால் குறுஞ்செய்தி பரிமாறிக் கொள்ளும் வசதியுடன் அறிமுகம் ஆன வாட்ஸ் அப் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது.

உலக முழுவதும் பல பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். துவக்கத்தில் வெறும் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வசதியுடன் வந்த வாட்ஸ் அப் அடுத்தடுத்து பல அசத்தல் அப்டேட்களை கொண்டு வந்தது. இமேஜ்களை ஷேர் செய்யும் வசதி, பிடிஎப் வடிவிலான கோப்புகளை பகிரும் வசதி என அடிக்கடி அப்டேட்களை கொடுத்து பயனர்களுக்கு கூடுதல் வசதியை அளித்து வருகிறது.

அதேபோல், ஸ்டேடஸ் வைக்கும் வசதியும் அறிமுகம் ஆனது. வாட்ஸ் அப் போலவே மேலும் சில செயலிகளும் இணையத்தில் போட்டி கொடுக்க துவங்கியதால் வாட்ஸ் அப் பயனர்களை தக்க வைப்பதற்காக புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக இமெஜ்கள் மற்றும் வீடியோக்கள் வைக்க வசதி இருந்தது. அதன்பிறகு வாய்ஸ் நோட்ஸ்களையும் ஸ்டேட்ஸ்களாக வைக்கும் வசதியை அண்மையில் அறிமுகம் செய்தது.

அதேபோல், வாட்ஸ் அப்பில் delete for everyone-க்கு பதிலாக தவறுதலாக delete for me கொடுக்கும் நபர்களுக்காக undo வசதியையும் கொடுத்தது. அதேபோல், நமக்கு நாமே மெசேஜ் அனுப்பும் வசதியும் அறிமுகம் ஆனது. வாட்ஸ் அப்பில் இமேஜ்களை தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் போது இமேஜ் குவாலிட்டி குறைவதாக வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் ஆதங்கப்படுவதுண்டு.

அழகாக எடுக்கும் பல இமேஜ்களும் அதன் குவாலிட்டி குறைவதாக அலட்டிக்கொள்ளும் பயனர்களை குஷிப்படுத்தும் வகையில் விரைவில் ஒரு புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, இனி தங்கள் நண்பர்களுக்கு இமேஜ்களை பகிரும் போது அதன் அசல் தரத்தில் (குவாலிட்டி) அப்படியே பகிர முடியுமாம். வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்படும் புதிய அப்டேட்கள் குறித்து டிராக் செய்யும் WaBetaInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் 450 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
Next articleஇன்றைய ராசிபலன் 24/01/2023