யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் – தெல்லிப்பாப்பா – வீமன்காமம் பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (22-01-2023) தெல்லிப்பழை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 37 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, 40,000 மில்லி கோடா 15,750 மில்லி மதுபானம் மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்கான உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleவிலை அதிகரிப்பால் பாண் வாங்குவதை தவிர்த்த மக்கள் ! தீர்வாக பாணின் விலையை குறைக்க திட்டம் !
Next articleயாழில் இரு வாரங்களில் 80 ஏக்கர் காணிவிடுவிப்பு!